யோபு 15:30-34 - WCV
30
இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை: அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும்.
31
வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்: ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.
32
அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே அது நடக்கும்: அவர்களது தளிர் உலர்ந்துவிடும்:
33
பிஞ்சுகளை உதிர்க்கும் திராட்சைச் செடிபோன்றும் பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும் அவர்கள் இருப்பர்.
34
ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம் கருகிப்போம்: கையூட்டு வாங்குவோரின் கூடாரம் எரியுண்ணும்.