சங்கீதம் 53:1-3 - WCV
1
“கடவுள் இல்லை” என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்: அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்: நல்லது செய்வார் யாரும் இல்லை.
2
கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்: மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார்.
3
எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டு போயினர்: நல்லது செய்வார் யாரும் இல்லை: ஒருவர் கூட இல்லை.