| 1 | ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு. | எரே 1:2 எரே 1:4 எரே 2:1 |
| 2 | “நீதி திருமணம் செய்யாதே: இந்த இடத்தில் உனக்குப் புதல்வரோ புதல்வியரோ இருக்கவேண்டாம். | ஆதி 19:14 மத் 24:19 லூக் 21:23 லூக் 23:29 1கொரி 7:26 1கொரி 7:27 |
| 3 | இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும் அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே: | எரே 16:5 எரே 16:9 |
| 4 | அவர்கள் கொடும் நோய்களால் மடிவார்கள். அவர்களுக்காக யாரும் அழமாட்டார்கள்: அவர்களை அடக்கம் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சாணம்போல் தரையில் கிடப்பார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அழிந்து போவார்கள். அவர்களின் பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். | எரே 14:16 எரே 15:2 எரே 15:3 சங் 78:64 |
| 5 | ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ இழவு வீட்டுக்குப் போக வேண்டாம்: அவர்களுக்காக அழுவதற்கோ துக்கம் கொண்டாடுவதற்கோ நீ செல்ல வேண்டாம்: ஏனெனில் நான் என் அமைதியையும் பேரன்பையும் இரக்கத்தையும் இந்த மக்களிடமிருந்து எடுத்துவிட்டேன். | எரே 16:6 எரே 16:7 எசே 24:16-23 |
| 6 | இந்நாட்டிலுள்ள பெரியோரும் சிறியோரும் இறந்து போவர். அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்: அவர்களுக்காக அழவும் மாட்டார்கள். அவர்களை முன்னிட்டு யாரும் தங்களைக் காயப்படுத்திக்கொள்ளவோ மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள். | எரே 13:13 ஏசா 9:14-17 ஏசா 24:2 எசே 9:5 எசே 9:6 ஆமோ 6:11 வெளிப் 6:15 வெளிப் 20:12 |
| 7 | இறந்தோரை எண்ணித் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதல் அளிக்க, அப்பம் தருவார் யாருமிரார். தாய் அல்லது தந்தைக்காகத் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதலின் கிண்ணத்தில் பருகக் கொடுக்கவும் யாருமிரார். | உபா 26:14 யோபு 42:11 எசே 24:17 ஓசி 9:4 |
| 8 | விருந்து நடக்கும் வீடுகளுக்குச் செல்லாதே: உண்டு குடிப்பதற்காக அங்கு அமராதே,” | எரே 15:17 சங் 26:4 பிரச 7:2-4 ஏசா 22:12-14 ஆமோ 6:4-6 மத் 24:38 லூக் 17:27-29 1கொரி 5:11 எபே 5:11 |
| 9 | ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும், உவகைக் குரலும், திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும். | எரே 7:34 எரே 25:10 ஏசா 24:7-12 எசே 26:13 ஓசி 2:11 வெளிப் 18:22 வெளிப் 18:23 |
| 10 | நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம் அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி,”எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும் ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன? எங்கள் குற்றம் என்ன? எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?” என்று கேட்பார்கள். | எரே 2:35 எரே 5:19 எரே 13:22 எரே 22:8 எரே 22:9 உபா 29:24 உபா 29:25 1இரா 9:8 1இரா 9:9 ஓசி 12:8 |
| 11 | நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: ஆண்டவர் கூறுவது: உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர். அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர். என்னையோ புறக்கணித்தனர். என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. | எரே 2:8 எரே 5:7-9 நியா 2:12 நியா 2:13 நியா 10:13 நியா 10:14 நெகே 9:26-29 சங் 106:35-41 தானி 9:10-12 |
| 12 | நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப் பெருந்தீமைகள் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்: என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை. | எரே 7:26 எரே 13:10 2தீமோ 3:13 |
| 13 | ஆகையால் இந்த நாட்டிலிருந்து, உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு, உங்களைத் தூக்கி எறிவேன். அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்: அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது. | எரே 6:15 எரே 15:4 எரே 15:14 எரே 17:4 லேவி 18:27 லேவி 18:28 உபா 4:26-28 உபா 28:36 உபா 28:63-65 உபா 29:28 உபா 30:17 உபா 30:18 யோசு 23:15 யோசு 23:16 2நாளா 7:20 |
| 14 | ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது “எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று யாரும் சொல்லமாட்டார்கள். | எரே 23:7 எரே 23:8 ஏசா 43:18 ஏசா 43:19 ஓசி 3:4 ஓசி 3:5 |
| 15 | மாறாக, “வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று கூறுவார்கள். ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்திருந்த நாட்டிற்கே அவர்களை மீண்டும் அழைத்து வருவேன். | எரே 3:18 எரே 24:6 எரே 30:3 எரே 30:10 எரே 31:8 எரே 32:37 எரே 50:19 உபா 30:3-5 சங் 106:47 ஏசா 11:11-16 ஏசா 13:5 ஏசா 13:6 ஏசா 14:1 ஏசா 27:12 ஏசா 27:13 எசே 34:12-14 எசே 36:24 எசே 37:21 எசே 37:22 எசே 39:28 ஆமோ 9:14 |
| 16 | ஆண்டவர் கூறுவது: இதோ, மீனவர் பலரை அனுப்புகிறேன். அவர்கள் அவர்களைப் பிடிப்பர். அதன்பின் வேடர் பலரையும் அனுப்புவேன். அவர்கள் அனைத்து மலைகளிலும் குன்றுகளிலும் பாறையிடுக்குகளிலும் உள்ளோரை வேட்டையாடுவர். | எரே 25:9 ஆமோ 4:2 ஆபகூ 1:14 ஆபகூ 1:15 |
| 17 | அவர்கள் வழிகளெல்லாம் என் கண்முன்னே உள்ளன. அவை எனக்கு மறைவாய் இருப்பதில்லை. அவர்களின் குற்றங்கள் என் பார்வைக்குத் தப்புவதில்லை. | எரே 23:24 எரே 32:19 2நாளா 16:9 யோபு 34:21 யோபு 34:22 சங் 90:8 சங் 139:3 நீதி 5:21 நீதி 15:3 ஏசா 29:15 எசே 8:12 எசே 9:9 லூக் 12:1 லூக் 12:2 1கொரி 4:5 எபிரெ 4:13 |
| 18 | முதற்கண், அவர்களின் குற்றத்திற்காகவும், பாவத்திற்காகவும் அவர்களுக்கு இரட்டிப்பான தண்டனை கொடுப்பேன். ஏனெனில், பிணம் ஒத்த சிலைகளால் அவர்கள் என் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்: அருவருப்பானவற்றால் என் உரிமைச் சொத்தை நிரப்பினார்கள். | எரே 17:18 ஏசா 40:2 ஏசா 61:7 வெளிப் 18:6 |
| 19 | ஆண்டவரே! என் வலிமையே! என் அரணே! துன்பக் காலத்தில் என் புகலிடமே! உலகின் எல்லைகளிலிருந்து வேற்றினத்தார் உம்மிடம் வந்து, “எங்கள் மூதாதையர் பொய்ம்மையை மரபுரிமையாகப் பெற்றனர்: எதற்கும் பயனற்ற சிலைகளையே பெற்றனர். | எரே 17:17 சங் 18:1 சங் 18:2 சங் 19:14 சங் 27:5 சங் 46:1 சங் 46:7 சங் 46:11 சங் 62:2 சங் 62:7 சங் 91:1 சங் 91:2 சங் 144:1 சங் 144:2 நீதி 18:10 ஏசா 25:4 ஏசா 32:2 எசே 11:16 நாகூ 1:7 ஆபகூ 3:19 |
| 20 | மனிதர் தமக்குத் தாமே தெங்வங்களைச் செய்ய முடியுமா? அவை தெய்வங்கள் அல்லவே!” என்று கூறுவார்கள். | சங் 115:4-8 சங் 135:14-18 ஏசா 36:19 ஏசா 37:19 ஓசி 8:4-6 அப் 19:26 கலா 1:8 கலா 4:8 |
| 21 | “எனவே இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்: என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன். என் பெயர் ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.” | யாத் 9:14-18 யாத் 14:4 சங் 9:16 எசே 6:7 எசே 24:24 எசே 24:27 எசே 25:14 |