ஓசியா 8:4-6 - WCV
4
அவர்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்: அது என்னாலே அன்று: அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்: அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கெனச் சிலைகளைச் செய்தார்கள்: தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.
5
சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்: என் கோபத்தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?
6
அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.