ஏசாயா 9:14-17 - WCV
14
ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில் உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை அனைவரையும், ஒலிவமரக்கிளையையும் நாணலையும் ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்:
15
முதியவரும், மதிப்புமிக்கவருமே உயர்ந்தோர்: பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.
16
இந்த மக்களை வழிநடத்தியோர் அவர்களை நெறிபிறழச் செய்தனர்: அவர்களால் வழி நடத்தப்பட்டவரோ அழிந்துபோயினர்.
17
ஆதலால், அவர்களுடைய இளைஞரைக் குறித்து என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை: அவர்களிடையே வாழும் திக்கற்றோர், கைம்பெண்கள்மேல் இரக்கம் காட்டவில்லை: அவர்கள் அனைவரும்இறைப்பற்று இல்லாதவர்கள்: தீச்செயல் புரிபவர்கள்: எல்லாரும் மதிகேட்டையே பேசினர்: இவையெல்லாம் நடந்தும் அவர் சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.