சங்கீதம் 106:35-41 - WCV
35
வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்:
36
அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்: அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின.
37
அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்:
38
மாசற்ற இரத்தத்தை, தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்: கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டார்கள்: அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது.
39
அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்: தங்கள் செயல்கள் மூலம் வேசித்தனம் செய்தனர்.
40
எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது: தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார்.
41
வேற்றினத்தாரின் கையில் அவர் அவர்களை ஒப்படைத்தார்: அவர்களை வெறுத்தோரே அவர்களை ஆட்சி செய்தனர்.