7
நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்: தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்: அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்: அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்: விலைமாதர் வீட்டில் கூடினார்கள்:
8
தின்று கொழுத்து மோக வெறி கொண்ட குதிரைகள்போல், ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக் கனைக்கிறான்.
9
இவற்றிற்காக நான் தண்டிக்க மாட்டேனா? என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களை நான் பழி வாங்காமல் இருப்பேனா?