தானியேல் 9:10-12 - WCV
10
எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.
11
நாங்களோ அவரது குரலொளியை ஏற்கவில்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது திருச்சட்டத்தை மீறி உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர். கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, சாபமும் கேடும் எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன. ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12
எங்களுக்கும் எங்களை ஆண்டுவந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக அவர் கூறியதை எங்கள்மீது அவர் சுமத்தியுள்ள பெரும் துன்பத்தின் வழியாய் உறுதிப்படுத்தியுள்ளார். ஏனெனில், எருசலேமுக்கு எதிராக நிகழ்ந்ததுபோல் உலகில் வேறெங்கும் நடக்கவே இல்லை.