சங்கீதம் 129:6-8 - WCV
6
கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்: வளருமுன் அது உலர்ந்துபோகும்.
7
அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடி கூடக் கிடைக்காது: அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.
8
வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, 'ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!' என்றோ 'ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்' என்றோ சொல்லார்.