10
காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்: புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.
11
என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்: எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.
12
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்: லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.
13
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.
14
அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்: என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்:
15
'ஆண்டவர் நேர்மையுள்ளவர்: அவரே என் பாறை: அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர்.