4
தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது: ஆழ் ஊற்றுகள் அதனை உயர்ந்து வளரச் செய்தன: அவை தம் அருவிகளாக அதனைச் சுற்றி ஓடி கால்வாய்களாகக் காட்டின் எல்லா மரங்களுக்கும் நீர் பாய்ச்சின.
5
காட்டின் எல்லா மரங்களையும் விட அது ஓங்கி வளர்ந்தது: அதன் தளிர்கள் பெருகின: நீர் வளத்தால் கிளைகள் நீண்டன: கொப்புகள் மிகுந்தன.
6
வானத்துப் பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் கூடுகள் கட்டின: காட்டு விலங்குகள் எல்லாம் கன்றுகள் ஈன்றன. அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம் வாழ்வு கண்டன.
7
மிகுந்த நீரினுள் அதன் வேர்கள் சென்றதால், கிளைகள் தழைத்து அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.
8
கடவுளின் சோலையிலிருந்த கேதுரு மரங்களுக்கு அதற்குச் சமமான கிளைகள் இல்லை: அர்மோன் மரங்களுக்கு அதற்கு இணையான கொப்புகள் இல்லை: கடவுளின் சோலையிலிருந்த எந்த மரமும் அதைப்போன்று அழகுடன் இருந்ததில்லை.
9
அடர்ந்த கிளைகளால் நான் அதனை அழகுபடுத்தினேன்: கடவுளின்”சோலையாகிய ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம் அதன்மேல் பொறாமை கொண்டன.
10
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அது உயர்ந்து வளர்ந்து தன் உச்சியை மேகங்களுக்குள் நுழைத்து, தன் உயரத்தைப் பற்றித் தன் இதயத்தில் செருக்குற்றது.