சகரியா 7:11-14 - WCV
11
ஆனால் அவர்களோ அதற்குச் செவிகொடுக்க மறுத்தார்கள்: இறுகிய மனத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள்.
12
படைகளின் ஆண்டவர் தம் ஆவியால் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக அனுப்பித்தந்த திருச்சட்டத்தையையும் வாக்குகளையும் கேட்டுவிடாதபடி பாறையைப்போல் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டார்கள்: ஆதலால் படைகளின் ஆண்டவர் கடுஞ்சினமுற்றார்.
13
“நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை, “ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
14
“ஆகவே முன்பின் அறியாத வேற்றினத்தார் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தேன்: இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு பாழடைந்து போயிற்று: போவார் வருவார் எவருமே அங்கில்லை: இனிய நாட்டைப் பாழாக்கிவிட்டார்கள்.”