| 1 | ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: |
| 2 | ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே: ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள். | எரே 17:19 எரே 19:2 எரே 19:14 எரே 22:1 எரே 26:2 எரே 36:6 எரே 36:10 நீதி 1:20 நீதி 1:21 நீதி 8:2 நீதி 8:3 யோவா 18:20 அப் 5:20 அப் 5:42 |
| 3 | இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: “உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன். | எரே 7:5-7 எரே 18:11 எரே 26:13 எரே 35:15 நீதி 28:13 ஏசா 1:16-19 ஏசா 55:7 எசே 18:30 எசே 18:31 எசே 33:4-11 மத் 3:8-10 யாக் 4:8 |
| 4 | “இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!” என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம். | எரே 7:8 எரே 6:14 எரே 28:15 எரே 29:23 எரே 29:31 எசே 13:19 மத் 3:9 மத் 3:10 |
| 5 | நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால், | எரே 7:3 எரே 4:1 எரே 4:2 ஏசா 1:19 |
| 6 | அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால், | எரே 22:3 எரே 22:4 எரே 22:15 எரே 22:16 யாத் 22:21-24 உபா 24:17 உபா 27:19 யோபு 31:13-22 சங் 82:3 சங் 82:4 சகரி 7:9-12 மல்கி 3:5 யாக் 1:27 |
| 7 | இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன். | எரே 17:20-27 எரே 18:7 எரே 18:8 எரே 25:5 |
| 8 | நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள். | எரே 7:4 எரே 4:10 எரே 5:31 எரே 8:10 எரே 14:13 எரே 14:14 எரே 23:14-16 எரே 23:26-16 எரே 23:32-16 ஏசா 28:15 ஏசா 30:10 எசே 13:6-16 |
| 9 | களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்: பொய்யாணை இடுகிறீர்கள்: பாகாலுக்குத் தூபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள். | எரே 9:2-9 சங் 50:16-21 ஏசா 59:1-8 எசே 18:10-13 எசே 18:18-13 எசே 33:25 எசே 33:26 ஓசி 4:1-3 மீகா 3:8-12 செப் 1:5 சகரி 5:3 சகரி 5:4 மல்கி 3:5 ரோம 2:2 ரோம 2:17-29 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19-21 எபே 5:5-7 2தீமோ 3:2-5 யாக் 4:1-4 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 10 | ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, “நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்” என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு? | நீதி 7:14 நீதி 7:15 நீதி 15:8 ஏசா 1:10-15 ஏசா 48:2 ஏசா 58:2-4 எசே 20:39 எசே 23:29 எசே 23:37 எசே 23:39 எசே 33:31 மத் 23:14 யோவா 13:18 யோவா 13:26 யோவா 13:27 யோவா 18:28 |
| 11 | என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்கிறார் ஆண்டவர். | 2நாளா 6:33 ஏசா 56:7 மத் 21:13 மாற் 11:17 லூக் 19:45 லூக் 19:46 யோவா 2:16 |
| 12 | நான் முன்னாளில் குடியிருந்த சீலோ என்னும் என் இடத்திற்குப் போங்கள். என் மக்கள் இஸ்ரயேல் செய்த தீமையின் பொருட்டு நான் அதற்குச் செய்துள்ளதைப் பாருங்கள். | யோசு 18:1 நியா 18:31 1சாமு 1:3 |
| 13 | ஆண்டவர் கூறுவது: நீங்கள் இந்தத் தீய செயல்களை எல்லாம் செய்தீர்கள். நான் தொடர்ந்து கூறியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. நான் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தரவில்லை. | எரே 7:25 எரே 11:7 எரே 25:3 எரே 35:15 எரே 44:4 2நாளா 36:15 2நாளா 36:16 நெகே 9:29 நெகே 9:30 |
| 14 | எனவே, என் பெயர் விளங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்தக் கோவிலுக்கும் உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இந்த இடத்திற்கும் சீலோவிற்குச் செய்தது போலவே செய்யப்போகிறேன். | எரே 7:4 எரே 7:10 உபா 28:52 மீகா 3:11 அப் 6:13 அப் 6:14 |
| 15 | உங்கள் சகோதரர் அனைவரையும் எப்ராயிம் வழிமரபினர் யாவரையும் ஒதுக்கியதுபோல, உங்களையும் என் முன்னிலையிலிருந்து ஒதுக்கிவிடுவேன். | எரே 3:8 எரே 15:1 எரே 23:39 எரே 52:3 2இரா 17:18-20 2இரா 17:23-20 2இரா 24:20 ஓசி 1:4 ஓசி 9:9 ஓசி 9:16 ஓசி 9:17 ஓசி 13:16 |
| 16 | இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்: இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்: என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன். | எரே 11:14 எரே 14:11 எரே 14:12 எரே 15:1 எரே 18:20 யாத் 32:10 எசே 14:14-20 1யோவா 5:16 |
| 17 | யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா? | எரே 6:27 எசே 8:6-18 எசே 14:23 |
| 18 | புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள். | எரே 44:17-19 எரே 44:25-19 1கொரி 10:22 |
| 19 | எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்: தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு! | எரே 2:17 எரே 2:19 உபா 32:16 உபா 32:21 உபா 32:22 ஏசா 1:20 ஏசா 1:24 எசே 8:17 எசே 8:18 1கொரி 10:22 |
| 20 | ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்: அதனை அணைக்க முடியாது. | எரே 4:23-26 எரே 9:10 எரே 9:11 எரே 12:4 எரே 14:16 எரே 42:18 எரே 44:6 ஏசா 42:25 புலம் 2:3-5 புலம் 4:11 எசே 20:47 எசே 20:48 எசே 22:22 தானி 9:11 நாகூ 1:6 மல்கி 4:1 வெளிப் 14:10 வெளிப் 16:1-21 |
| 21 | இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள். | எரே 6:20 ஏசா 1:11-15 ஓசி 8:13 ஆமோ 5:21-23 |
| 22 | உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை: கட்டளையிடவும் இல்லை. | 1சாமு 15:22 சங் 40:6 சங் 50:8-17 சங் 51:16 சங் 51:17 ஓசி 6:6 மத் 9:13 மாற் 12:33 |
| 23 | ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவி கொடுங்கள்: அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும். | எரே 11:4 எரே 11:7 யாத் 15:26 யாத் 19:5 யாத் 19:6 லேவி 26:3-12 உபா 5:29 உபா 5:33 உபா 6:3 உபா 11:27 உபா 13:4 உபா 30:2 உபா 30:8 உபா 30:20 ரோம 16:26 2கொரி 10:5 எபிரெ 5:9 |
| 24 | அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை: கவனிக்கவும் இல்லை: பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்: முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். | எரே 7:26 எரே 11:7 எரே 11:8 யாத் 32:7 யாத் 32:8 நெகே 9:16-20 சங் 81:11 சங் 81:12 சங் 106:7-48 எசே 20:8 எசே 20:13 எசே 20:16 எசே 20:21 |
| 25 | உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். | எரே 32:30 எரே 32:31 உபா 9:7 உபா 9:21-24 1சாமு 8:7 1சாமு 8:8 எஸ்றா 9:7 நெகே 9:16-18 நெகே 9:26-18 சங் 106:13-22 எசே 2:3 எசே 20:5-32 எசே 23:2 எசே 23:3 |
| 26 | அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை: கவனிக்கவில்லை: முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர். | எரே 7:24 எரே 6:17 எரே 11:8 எரே 17:23 எரே 25:3 எரே 25:7 எரே 26:5 எரே 29:19 எரே 34:14 எரே 44:16 2நாளா 33:10 நெகே 9:16 தானி 9:6 |
| 27 | நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்: அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்: அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். | எரே 1:7 எரே 26:2 எசே 2:4-7 எசே 3:17 எசே 3:18 அப் 20:27 |
| 28 | தங்களின் கடவுளாகிய ஆணடவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று. | எரே 2:30 எரே 5:3 எரே 6:29 எரே 6:30 ஏசா 1:4 ஏசா 1:5 செப் 3:2 |
| 29 | உன் தலை முடியை மழித்து எறிந்துவிடு: மொட்டைக் குன்றுகளில் நின்று ஒப்பாரி வை: ஏனெனில், தம் சீற்றத்தில் ஆண்டவர் இத்தலைமுறையைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார். | எரே 16:6 எரே 47:5 எரே 48:37 யோபு 1:20 ஏசா 15:2 ஏசா 15:3 மீகா 1:16 |
| 30 | ஏனெனில், யூதாவின் மக்கள் என் கண்முன் தீமை செய்தனர் என்கிறார் ஆண்டவர். என் பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி அவர்கள் அருவருப்பானவற்றை அங்கு வைத்தார்கள். | எரே 23:11 எரே 32:34 2இரா 21:4 2இரா 21:7 2இரா 23:4-6 2இரா 23:12-6 2நாளா 33:4 2நாளா 33:5 2நாளா 33:7 2நாளா 33:15 எசே 7:20 எசே 8:5-17 எசே 43:7 எசே 43:8 தானி 9:27 |
| 31 | அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி பென்இன்னோம் பள்ளத்தாக்கில் உள்ள தோபேத்தில் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இதனை நான் கட்டளையிடவில்லை. இது என் எண்ணத்தில்கூட எழவில்லை. | எரே 19:5 எரே 19:6 எரே 32:35 2இரா 23:20 2நாளா 33:6 |
| 32 | ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது: மாறாகப் “படுகொலைப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படும்: வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர். | எரே 19:6 லேவி 26:30 எசே 6:5-7 |
| 33 | இம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். யாரும் அவற்றை விரட்ட மாட்டார்கள். | எரே 8:1 எரே 8:2 எரே 9:22 எரே 12:9 எரே 16:4 எரே 22:19 எரே 25:33 எரே 34:20 உபா 28:26 சங் 79:2 சங் 79:3 எசே 39:4 எசே 39:18-20 வெளிப் 19:17 வெளிப் 19:18 |
| 34 | அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும். | எரே 16:9 எரே 25:10 எரே 33:10 ஏசா 24:7 ஏசா 24:8 எசே 26:13 ஓசி 2:11 வெளிப் 18:23 |