1
இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு: நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை: கடவுளை அறியும் அறிவும் இல்லை.
2
பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு, விபசாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்: இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.
3
ஆதலால் நாடு புலம்புகின்றது: அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன: காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும், கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன.