யாத்திராகமம் 22:21-24 - WCV
21
அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள்.
22
விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.
23
நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.
24
மேலும் என்சினம் பற்றியெரியும்.நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன்.இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர்.உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.