சங்கீதம் 106:13-22 - WCV
13
ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்: அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.
14
பாலைநிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.
15
அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குச் கொடுத்தார்: அவர்களின் உயிரை அழிக்குமாறு அவர்கள்மீது நோயை அனுப்பினார்.
16
பாளையத்தில் இருக்கும்போது மோசேயின்மீதும், ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற ஆரோன்மீதும், அவர்கள் பொறாமை கொண்டார்கள்.
17
நிலம்பிளந்து தாத்தானை விழுங்கியது: அபிராமின் கும்பலை அப்படியே புதைத்து விட்டது.
18
அக்கும்பலிடையே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது: தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது.
19
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்: வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்:
20
தங்கள் “மாட்சி”க்குப் பதிலாக புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்:
21
தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்: எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்:
22
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்: செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.