3
அவர் வெஞ்சினம் கொண்டு இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்: பகைவன் வந்தபொழுது தம் வலக்கையைப் பின்புறம் மறைத்துக்கொண்டார்: சூழ்ந்திருக்கும் யாவற்றையும் எரிக்கும் தீப்பிழம்பென, அவர் யாக்கோபின் மீது பற்றியெரிந்தார்.
4
எதிரி போலத் தமது வில்லை நாணேற்றினார்: பகைவன் போலத் தம் வலக்கையை ஓங்கினார்: கண்ணுக்கு இனியவை அனைத்தையும் அழித்தார்: மகள் சீயோனின் கூடாரத்தில் தம் சினத்தை நெருப்பெனக் கொட்டினார்.
5
என் தலைவர் எதிரி போலானார்: அவர் இஸ்ரயேலை அழித்தார்: அதன் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தார்: மகள் யூதாவின் அழுகையையும் புலம்பலையும் மிகுதியாக்கினார்.