| 1 | எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார். | எரே 29:25-29 2நாளா 30:1-6 எஸ்தர் 9:20 அப் 15:23 2கொரி 7:8 கலா 6:11 எபிரெ 13:22 வெளிப் 2:1-3 |
| 2 | அரசன் எக்கோனியா, அரச அன்னை, அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்ற பின்னர், | எரே 22:24-28 |
| 3 | சாப்பானின் மகன் எலாசா, இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் யூதாவின் அரசன் செதேக்கியா அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான். | எரே 26:24 எரே 39:14 2இரா 22:8 எசே 8:11 |
| 4 | அதன் சொற்களாவன: “இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே: | எரே 24:5 ஏசா 5:5 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 45:7 ஏசா 59:1 ஏசா 59:2 ஆமோ 3:6 |
| 5 | வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்: தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள். | எரே 29:10 எரே 29:28 எசே 28:26 |
| 6 | பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள். உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்: உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்! இவ்வாறு அவர்களும் தங்களுக்குப் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும். அங்கே பல்கிப் பெருகுங்கள்: எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள். | எரே 16:2-4 ஆதி 1:27 ஆதி 1:28 ஆதி 9:7 1தீமோ 5:14 |
| 7 | உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்: அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது. | தானி 4:27 தானி 6:4 தானி 6:5 ரோம 13:1 ரோம 13:5 1பேது 2:13-17 |
| 8 | இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும் குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். | எரே 14:14 எரே 23:21 எரே 27:14 எரே 27:15 எரே 28:15 சகரி 13:4 மத் 24:4 மத் 24:5 மத் 24:24 மாற் 13:5 மாற் 13:6 மாற் 13:22 மாற் 13:23 லூக் 21:8 ரோம 16:18 2கொரி 11:13-15 எபே 4:14 எபே 5:6 2தெச 2:3 2தெச 2:9-11 2தீமோ 3:13 2யோவா 1:7-9 வெளிப் 13:14 வெளிப் 19:20 |
| 9 | அவர்கள் காணும் கனவுகளை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை,” என்கிறார் ஆண்டவர். | எரே 29:23 எரே 29:31 எரே 27:15 |
| 10 | 10”ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் நான் உங்களைச் சந்திக்க வருவேன்: உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன். | எரே 25:12 எரே 27:7 எரே 27:22 2நாளா 36:21-23 எஸ்றா 1:1 எஸ்றா 1:2 தானி 9:2 சகரி 7:5 |
| 11 | ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். | யோபு 23:13 சங் 33:11 சங் 40:5 ஏசா 46:10 ஏசா 46:11 ஏசா 55:8-12 மீகா 4:12 சகரி 1:6 சகரி 8:14 சகரி 8:15 |
| 12 | நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். | எரே 31:9 எரே 33:3 நெகே 2:4-20 சங் 10:17 சங் 50:15 சங் 102:16 சங் 102:17 ஏசா 30:19 ஏசா 65:24 எசே 36:37 தானி 9:3-19 சகரி 13:9 மத் 7:7 மத் 7:8 |
| 13 | நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். | லேவி 26:40-45 உபா 4:29-31 உபா 30:1-20 1இரா 8:47-50 2நாளா 6:37-39 சங் 91:15 ஏசா 55:6 ஏசா 55:7 ஓசி 5:15 ஓசி 6:1-3 ஆமோ 5:4-6 செப் 2:1-3 லூக் 11:9 லூக் 11:10 |
| 14 | ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்: நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களிங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன். | உபா 4:7 1நாளா 28:9 2நாளா 15:12-15 சங் 32:6 சங் 46:1 ஏசா 45:19 ஏசா 55:6 ரோம 10:20 |
| 15 | 'ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்' என்று சொல்கிறீர்கள். | எரே 29:8 எரே 29:9 எரே 28:1-17 எசே 1:1 எசே 1:3 |
| 16 | ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே: | எரே 29:3 எரே 24:2 எரே 38:2 எரே 38:3 எரே 38:17-23 எசே 6:1-9 எசே 17:12-21 எசே 21:9-27 எசே 22:31 எசே 24:1-14 |
| 17 | படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ! அவர்கள் மீது வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பிவைப்பேன். தின்ன முடியாத அளவுக்கு அழுகிப் போன காட்டு அத்திப் பழங்களைப் போல் அவர்களை ஆக்குவேன். | எரே 29:18 எரே 15:2 எரே 15:3 எரே 24:8-10 எரே 34:17-22 எரே 43:11 எரே 52:6 எசே 5:12-17 எசே 14:12-21 லூக் 21:11 லூக் 21:23 |
| 18 | வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு அவர்களைப் பின்தொடர்வேன். உலகின் எல்லா அரசுகளும் அவர்களை அருவருக்கும்படி செய்வேன்: நான் அவர்களை விரட்டியடித்துள்ள எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச் சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன். | எரே 15:4 எரே 24:9 எரே 34:17 லேவி 26:33 உபா 28:25 உபா 28:64 2நாளா 29:8 சங் 44:11 எசே 6:8 எசே 12:15 எசே 22:15 எசே 36:19 ஆமோ 9:9 சகரி 7:14 லூக் 21:24 |
| 19 | ஏனெனில் என் ஊழியர்களான இறைவாக்கினர்களை நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியிருந்தும், அவர்கள் என் சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நீங்களும் செவிகொடுக்கவில்லை, என்கிறார் ஆண்டவர். | எரே 6:19 எரே 7:13 எரே 7:24-26 எரே 25:3-7 எரே 26:5 எரே 32:33 எரே 34:17 எரே 35:14-16 எரே 44:4 எரே 44:5 சகரி 1:4-6 சகரி 7:11-13 எபிரெ 12:25 |
| 20 | எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்.” | எசே 3:11 எசே 3:15 |
| 21 | 21”என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான். | எரே 29:8 எரே 29:9 எரே 14:14 எரே 14:15 புலம் 2:14 |
| 22 | அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் அனைவரும் 'பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக' என்று சாபமிடுவர். | ஆதி 48:20 ரூத் 4:11 ஏசா 65:15 1கொரி 16:22 |
| 23 | ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்: பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்: நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்: இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்.” | எரே 7:9 எரே 7:10 எரே 23:14 எரே 23:21 சங் 50:16-18 செப் 3:4 2பேது 2:10-19 யூதா 1:8-11 |
| 24 | நெகலாமைச் சார்ந்த செமாயாவிடம் நீ சொல்லவேண்டியது: | எரே 29:31 எரே 29:32 |
| 25 | இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ உன் பெயரால் மடல்கள் எழுதி, எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும் மாசேயாவின் மகனும் குருவமான செப்பனியாவுக்கும் மற்ற குருக்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்துள்ளாய். | 1இரா 21:8-13 2இரா 10:1-7 2இரா 19:9 2இரா 19:14 2நாளா 32:17 எஸ்றா 4:7-16 நெகே 6:5 நெகே 6:17 நெகே 6:19 அப் 9:2 |
| 26 | செப்பனியாவுக்கு நீ எழுதியது: ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய் இருக்கும் பொருட்டும், இறைவாக்கினர்போல் நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனையும் தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும் குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார். | எரே 20:1 எரே 20:2 2இரா 11:15 2இரா 11:18 அப் 4:1 அப் 5:24 |
| 27 | அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனதோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்? | 2நாளா 25:16 ஆமோ 7:12 ஆமோ 7:13 யோவா 11:47-53 அப் 4:17-21 அப் 5:28 அப் 5:40 |
| 28 | இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, 'உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்: எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்: தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்' என்று செய்தி அனுப்பியுள்ளான். |
| 29 | இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார். |
| 30 | அப்பொழுது ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: |
| 31 | நாடு கடத்தப்பட்டோர் எல்லாருக்கும் நீ எழுதி அனுப்ப வேண்டியது: நெகலாமியனான செமாயாவைப்பற்றி ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் அனுப்பாதிருந்தும் செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து, அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான். | எரே 29:9 எரே 29:23 எரே 14:14 எரே 14:15 எரே 23:21 எரே 28:15-17 எசே 13:8-16 எசே 13:22-16 எசே 13:23-16 2பேது 2:1 |
| 32 | எனவே ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்,” என்கிறார் ஆண்டவர். | எரே 20:6 யாத் 20:5 எண் 16:27-33 யோசு 7:24 யோசு 7:25 2இரா 5:27 சங் 109:8-15 ஏசா 14:20 ஏசா 14:22 ஆமோ 7:17 |