1
பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள்.
2
பதரைப்போல் நீங்கள் தூற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே,
3
நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்: நேர்மையை நாடுங்கள்: மனத்தாழ்மையைத் தேடுங்கள்: ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.