37
அப்படி கொண்டு செல்லபட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனமாற்றம் அடைந்து, 'நாங்கள் பாவம் செய்தோம்: நெறிதவறினோம்: தீய வழியில்நடந்தோம்' என்று அவர்கள் விண்ணப்பம் செய்தால்,
38
அதாவது, தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையருக்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி உம்மிடம் வேண்டுதல் செய்தால்,
39
உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து அவர்கள் வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து, உமக்கெதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னித்து, அவர்களுக்கு வெற்றி வழங்குவீராக!