எரேமியா 34:17-22 - WCV
17
எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை: உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும் விடுதலை அறிவிக்கவுமில்லை. ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவற்றால் அழிவதற்கான “விடுதலை”யை நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர். உலக அரசுகள் அனைத்துக்கும் திகிலூட்டும் சின்னமாய் உன்னை மாற்றுவேன்.
18
இளங் காளையின் துண்டங்களுக்கு நடுவே கடந்து பேன யூதாவின் தலைவர்கள், எருசNலுமின் தலைவர்கள், அரசவையோர், குருக்கள், நாட்டுமக்கள் அனைவரும் என் திருமுன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி அதன் உடன்பாடுகளை நிறைவேற்றத் தவறினார்கள்.
19
எனவே, இரண்டாக வெட்டப்பட்டு, அத்துண்டங்களிடையே கடந்து செல்வதற்காகப் பயன்படுத்திய இளங்காளையைப் போல் அவர்களை நான் ஆக்குவேன்.
20
அவர்களை அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் நான் ஒப்புவிப்பேன். அவர்களுடைய பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் வையகத்து விலங்குகளுக்கும் இரையாகும்.
21
யூதா அரசன் செதேக்கியாவையும் நாட்டுத் தலைவர்களையும் அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், உங்களிடமிருந்து பின்வாங்கி நிற்கும் பாபிலோனிய மன்னனது படையின் கையிலும் ஒப்புவிப்பேன்.
22
இதோ! நான் கட்டளையிடப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை இந்நகருக்குத் திரும்ப அழைத்துவருவேன். அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவார்கள். யூதாவின் நகர்கள் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.