8
இருப்பினும் இப்பொய்க் காட்சியாளர்களும் அவ்வாறே உடலை மாசுபடுத்துகிறார்கள்: அதிகாரத்தைப் புறக்கணிக்கிறார்கள்: மாட்சிமிகு வானவரைப் பழித்துரைக்கிறார்கள்.
9
தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, “ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக” என்று மட்டும் சொன்னார்.
10
ஆனால் இவர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றையும் பழிக்கிறார்கள். பகுத்தறிவில்லாத விலங்குகளைப்போல் இயல்புணர்ச்சியினால் இவர்கள் அறிந்திருப்பதும் இவர்களுக்கு அழிவையே விளைவிக்கும்.
11
இவர்களுக்குக் கேடு விளைக! ஏனெனில் இவர்கள் காயின் சென்ற வழியில் சென்றார்கள்: கூலிக்காகப் பிலயாமின் தவற்றைத் துணிந்து செய்தார்கள்: கோராகைப் போல எதிர்த்து நின்று அழிந்தார்கள்.