8
அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்!
9
அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்! அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்!
10
அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!
11
அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!
12
அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனும் இல்லாதிருக்கட்டும்! தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்!
13
அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்! அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர் இல்லாது போகட்டும்!
14
அவனுடைய மூதாதையரின் குற்றத்தை ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்! அவனுடைய தாய் செய்த பாவத்தை அவர் மன்னியாது இருக்கட்டும்!
15
அவை என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்! அவனது நினைவை பூவுலகினின்று அடியோடு அவர் அகற்றட்டும்!