இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எரேமியா 28

                   
புத்தகங்களைக் காட்டு
1அதே ஆண்டில், அதாவது யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஐந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது:எரே 27:1
2“இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்துவிட்டேன்.எரே 27:2-12 எசே 13:5-16 மீகா 3:11
3பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன்.ஆதி 47:9 ஆதி 47:28 சங் 90:10
4அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்திற்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்', என்கிறார் ஆண்டவர்”.எரே 22:24 எரே 22:28 எரே 24:1 எரே 52:31-34 2இரா 25:27-30
5அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார்.எரே 28:1 எரே 7:2 எரே 19:14 எரே 26:2
6இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, “ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக!எண் 5:22 உபா 27:15-26 1இரா 1:36 1நாளா 16:36 சங் 41:13 சங் 72:19 சங் 89:52 சங் 106:48 மத் 6:13 மத் 28:20 1கொரி 14:16 2கொரி 1:20 வெளிப் 1:18 வெளிப் 3:14 வெளிப் 5:14 வெளிப் 19:4 வெளிப் 22:20 வெளிப் 22:21
7ஆயினும் உம்செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும்.1இரா 22:28
8உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவைப்பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர்.லேவி 26:14-46 உபா 4:26 உபா 4:27 உபா 28:15-68 உபா 29:18-28 உபா 31:16 உபா 31:17 உபா 32:15-44 1சாமு 2:27-32 1சாமு 3:11-14 1இரா 14:7-15 1இரா 17:1 1இரா 21:18-24 1இரா 22:8 ஏசா 5:1-8 ஏசா 6:9-12 ஏசா 13:18 ஏசா 24:1-23 யோவே 1:2-20 யோவே 3:1-11 மீகா 3:8-12 நாகூ 1:1-3 ஆமோ 1:2
9நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்” என்றார்.எரே 4:10 எரே 6:14 எரே 8:11 எரே 14:13 எசே 13:10 எசே 13:16
10அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான்.எரே 28:2 எரே 28:4 எரே 27:2 எரே 36:23 எரே 36:24 1இரா 22:11 1இரா 22:24 1இரா 22:25 மல்கி 3:13
11மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்” என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.எரே 23:17 எரே 29:9 1இரா 13:18 1இரா 22:6 1இரா 22:11 1இரா 22:12 2நாளா 18:10 2நாளா 18:22 2நாளா 18:23 நீதி 14:7 எசே 13:7
12இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:எரே 1:2 எரே 29:30 2இரா 20:4 1நாளா 17:3 தானி 9:2
1313”நீ யோய் அனனியாவிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்: அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்து கொள்வாய்.எரே 27:15 சங் 149:8 புலம் 2:14
14ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்.”எரே 27:4 எரே 27:7 எரே 40:4 உபா 4:20 உபா 28:48 ஏசா 14:4-6
15அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது: “அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய்.எரே 28:11 எரே 14:14 எரே 14:15 எரே 23:21 எரே 27:15 எரே 29:23 எரே 29:31 எரே 29:32 1இரா 22:23 எசே 13:2 எசே 13:3 எசே 13:22 எசே 22:28 புலம் 2:14 சகரி 13:3
16எனவே, ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்!”ஆதி 7:4 யாத் 32:12 உபா 6:15 1இரா 13:34 ஆமோ 9:8
17அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.ஏசா 44:25 ஏசா 44:26 சகரி 1:6
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.