15
”ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும்”.உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக”அப்படியே ஆகட்டும்” என்பர்.
16
”தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும்.உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்”என்பர்.
17
”தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும்”: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
18
”பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும்.உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
19
”அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும்”: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
20
”தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
21
”எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும்” என்பர்.
22
”தன் தந்தையில் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்:”உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
23
”தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
24
”தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
25
”குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும்” : உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.
26
”இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.