இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்: நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன். என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில், நீர் இங்கேயே இருந்து கொள்ளும். நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது: எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும் உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும்.