13
அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பணிந்திருங்கள்:
14
அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப்பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள்.
15
இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்.
16
நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்: விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்: கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.
17
எல்லாருக்கும் மதிப்புக் கொடுங்கள்: சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்: கடவுளுக்கு அஞ்சுங்கள்: அரசருக்கு மதிப்புக் கொடுங்கள்.