4
இஸ்ரயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்:
5
ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலில் காலெடுத்து வைக்காதீர்கள்: பெயேர்செபாவுக்குக் கடந்து போகவேண்டாம்: ஏனெனில் கில்கால் உண்மையாகவே நாடுகடத்தப்படும்: பெத்தேல் பாழாக்கப்படும்.
6
ஆண்டவரைத் தேடுங்கள்: நீங்கள் வாழ்வீர்கள்: இல்லையேல் அவர் யோசேப்பின் வீட்டின்மேல் தீ மூளச் செய்வார். அந்நெருப்பு அதை விழுங்கிவிடும், பெத்தேலில் அந்நெருப்பை அணைக்கக்கூடியவர் எவருமிரார்.