| 1 | அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு! | ஏசா 3:11 ஏசா 5:8 ஏசா 5:11 ஏசா 5:18 ஏசா 5:20-22 எரே 22:13 ஆபகூ 2:6 ஆபகூ 2:9 ஆபகூ 2:12 ஆபகூ 2:15 ஆபகூ 2:19 மத் 11:21 மத் 23:13-16 மத் 23:23-16 மத் 23:27-16 மத் 23:29-16 மத் 26:24 லூக் 11:42-44 லூக் 11:46-44 லூக் 11:47-44 லூக் 11:52-44 யூதா 1:11 |
| 2 | அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்: எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்: கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகின்றார்கள். திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள். | ஏசா 29:21 புலம் 3:35 ஆமோ 2:7 ஆமோ 5:11 ஆமோ 5:12 மல்கி 3:5 |
| 3 | தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்? | ஏசா 20:6 ஏசா 33:14 யோபு 31:14 எரே 5:31 எசே 24:13 எசே 24:14 வெளிப் 6:15 வெளிப் 6:16 |
| 4 | கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்து வருவீர்கள்: இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள். இதிலெல்லாம் ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை. ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை. | லேவி 26:17 லேவி 26:36 லேவி 26:37 உபா 31:15-18 உபா 32:30 எரே 37:10 ஓசி 9:12 |
| 5 | அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது: தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது. | ஆதி 10:11 |
| 6 | இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்: எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்: அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். | ஏசா 9:17 ஏசா 19:17 ஏசா 29:13 ஏசா 30:9-11 ஏசா 33:14 எரே 3:10 எரே 4:14 மத் 15:7 |
| 7 | அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு: மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்: பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான். | ஆதி 50:20 மீகா 4:11 மீகா 4:12 அப் 2:23 அப் 13:27-30 |
| 8 | அவன் இறுமாப்புடன் சொல்வதாவது: “என் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா? | ஏசா 36:8 2இரா 18:24 2இரா 19:10 எசே 26:7 தானி 2:37 |
| 9 | கல்னேர் நகர் கர்கமிசு நகர் போன்ற தல்லவா? ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு இணையல்லவா? சமாரியா நகர் தமஸ்கு நகரை ஒத்ததல்லவா? | ஆமோ 6:1 ஆமோ 6:2 |
| 10 | சிறப்பு வாய்ந்த, சிலைவணங்கும் அரசுகள் வரை என் கை எட்டியிருக்கின்றது: அந்நாட்டுச் சிலைகள் எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட எண்ணிக்கையில் மிகுதி. | ஏசா 10:14 2இரா 18:33-35 2இரா 19:12 2இரா 19:13 2இரா 19:17-19 2நாளா 32:12-16 2நாளா 32:19-16 |
| 11 | சமாரியாவையும் அதிலுள்ள சிலைகளையும் அழித்துப் பாழ்படுத்தியவன் நான்: இப்படியிருக்க, எருசலேமுக்கும் அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும் அவ்வாறே செய்யமாட்டேனோ?” | ஏசா 36:19 ஏசா 36:20 ஏசா 37:10-13 |
| 12 | எனவே சீயோன் மலைமேலும் எருசலேமிலும் என் வேலைகள் அனைத்தையும் முடித்தபின், ஆணவம் நிறைந்த அசீர்pய அரசனின் சிந்தனையை முன்னிட்டும், இறுமாப்புடன் அவன் பேசிய பேச்சுகளை முன்னிட்டும் “அவனை நான் தண்டிப்பேன்” என்கிறார் என் தலைவர். | ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 14:24-27 ஏசா 27:9 ஏசா 46:10 ஏசா 46:11 சங் 76:10 1பேது 4:17 |
| 13 | ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: “என் கைவலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்: என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்: மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்: அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்: அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன். | ஏசா 10:8 ஏசா 37:23 ஏசா 37:24 உபா 8:17 எசே 25:3 எசே 26:2 எசே 28:2-9 எசே 29:3 தானி 4:30 ஆமோ 6:13 ஆபகூ 1:16 |
| 14 | குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது: புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையுயம் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.” | ஏசா 5:8 யோபு 31:25 நீதி 18:12 நீதி 21:6 நீதி 21:7 ஓசி 12:7 ஓசி 12:8 நாகூ 2:9-13 நாகூ 3:1 ஆபகூ 2:5-11 |
| 15 | வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்புமிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னை தூக்கியவனைச் சுழற்றி வீச கைத்தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ? | ஏசா 10:5 சங் 17:13 சங் 17:14 எரே 51:20-23 எசே 28:9 ரோம 9:20 ரோம 9:21 |
| 16 | ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே அனுப்புவார்: அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்: அவர் நெருப்பு மூட்டுவார்: அது கொழுந்துவிட்டு எரியும். | ஏசா 5:17 ஏசா 14:24-27 ஏசா 29:5-8 ஏசா 37:6 ஏசா 37:7 ஏசா 37:29 ஏசா 37:36 2நாளா 32:21 சங் 106:15 அப் 12:23 அப் 9:5 அப் 30:30-33 அப் 33:10-14 |
| 17 | இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்: அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்: அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும், ஒரே நாளில் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விடும். | ஏசா 60:19 சங் 27:1 சங் 84:11 வெளிப் 21:23 வெளிப் 22:5 |
| 18 | வனப்புமிக்க அவனுடைய காடுகள், செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள் யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்: அது நோயாளி ஒருவன் உருக்குலைவதை ஒத்திருக்கும். | ஏசா 10:33 ஏசா 10:34 ஏசா 9:18 2இரா 19:23 2இரா 19:28 எரே 21:14 எசே 20:47 எசே 20:48 |
| 19 | அவனது காட்டில் மிகச் சில மரங்களே எஞ்சியிருக்கும்: ஒரு சிறுவன்கூட அவற்றை எண்ணி எழுதிவிடலாம். | ஏசா 37:36 |
| 20 | அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்: மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள். | ஏசா 1:9 ஏசா 4:2 ஏசா 4:3 ஏசா 6:13 ஏசா 37:4 ஏசா 37:31 ஏசா 37:32 எஸ்றா 9:14 ரோம 9:27-29 |
| 21 | யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர். | ஏசா 7:3 ஏசா 9:13 ஏசா 19:22 ஏசா 55:7 ஏசா 65:8 ஏசா 65:9 ஓசி 6:1 ஓசி 7:10 ஓசி 7:16 ஓசி 14:1 அப் 26:20 2கொரி 3:14-16 |
| 22 | இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்: அழிவு நெருங்கி வந்தாயிற்று: அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும். | 1இரா 4:20 ஓசி 1:10 ரோம 9:27 ரோம 11:5 ரோம 11:6 வெளிப் 20:8 |
| 23 | ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார். | ஏசா 14:26 ஏசா 14:27 ஏசா 24:1-23 தானி 4:35 |
| 24 | என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்: | ஏசா 4:3 ஏசா 12:6 ஏசா 30:19 ஏசா 46:13 ஏசா 61:3 எபிரெ 12:22-24 |
| 25 | ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்: அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்”. | ஏசா 10:33 ஏசா 10:34 ஏசா 12:1 ஏசா 12:2 ஏசா 14:24 ஏசா 14:25 ஏசா 17:12-14 ஏசா 30:30-33 ஏசா 31:4-9 ஏசா 37:36-38 ஏசா 54:7 2இரா 19:35 சங் 37:10 தானி 11:36 எபிரெ 10:37 |
| 26 | ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீது தமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார். | ஏசா 10:16-19 2இரா 19:35 சங் 35:23 |
| 27 | அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்: உங்கள் தோள்மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும். | ஏசா 9:4 ஏசா 14:25 2இரா 18:13 2இரா 18:14 நாகூ 1:9-13 |
| 28 | பகைவன் அய்யாத்துக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளான்: அவன் மிக்ரோனைக் கடந்து வந்துவிட்டான்: மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான். | யோசு 7:2 நெகே 11:31 |
| 29 | கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்: கேபாவில் தங்கி இரவைக் கழிக்கின்றார்கள்: இராமா நகரின் மக்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள்: சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள் ஓட்டமெடுக்கின்றார்கள். | 1சாமு 13:23 1சாமு 14:4 |
| 30 | பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்: இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்: அனத்தோத்தின் மக்களே, மறுமொழி கூறுங்கள். | 1சாமு 25:44 |
| 31 | மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்: கேபிமினில் வாழ்வோர் புகலிடம் தேடி ஓடுகிறார்கள். | யோசு 15:31 |
| 32 | இன்றே அப்பகைவன் நோபு நகரில் தங்குவான்: அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும் எருசலேமின் குன்றிற்கும் எதிராகக் கையை ஓங்கி அசைப்பான். | 1சாமு 21:1 1சாமு 22:19 நெகே 11:32 |
| 33 | நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர் அச்சுறுத்தும் ஆற்றலால், கிளைகளை வெட்டி வீழ்த்துவார்: உயர்ந்தவற்றின் கிளைகள் துண்டிக்கப்படும்: செருக்குற்றவை தாழ்த்தப்படும்: நிமிர்ந்து நிற்பவை தரைமட்டமாக்கப்படும். | ஏசா 10:16-19 ஏசா 37:24-36 ஏசா 37:38-36 2இரா 19:21-37 2நாளா 32:21 |
| 34 | அடர்ந்த காட்டை அவர் கோடரியால் வெட்டி வீழ்த்துவார்: லெபனோன் தன் உயர்ந்த மரங்களுடன் தரையிலே சாயும். | ஏசா 10:18 ஏசா 37:24 எரே 22:7 எரே 46:22 எரே 46:23 எரே 48:2 நாகூ 1:12 |