| 1 | ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது: முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்: பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். | ஏசா 8:22 |
| 2 | காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. | ஏசா 50:10 ஏசா 60:1-3 ஏசா 60:19-3 மீகா 7:8 மீகா 7:9 மத் 4:16 லூக் 1:78 லூக் 1:79 லூக் 2:32 யோவா 8:12 யோவா 12:35 யோவா 12:46 எபே 5:8 எபே 5:13 எபே 5:14 1பேது 2:9 1யோவா 1:5-7 |
| 3 | ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்: அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்: அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்: கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். | ஏசா 26:15 ஏசா 49:20-22 நெகே 9:23 சங் 107:38 ஓசி 4:7 சகரி 2:11 சகரி 8:23 சகரி 10:8 |
| 4 | மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர். | ஏசா 14:25 ஏசா 47:6 ஆதி 27:40 லேவி 26:13 எரே 30:8 நாகூ 1:13 |
| 5 | அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும். | ஏசா 13:4 1சாமு 14:19 எரே 47:3 யோவே 2:5 நாகூ 3:2 |
| 6 | ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ “வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்” என்று அழைக்கப்படும். | ஏசா 7:14 லூக் 1:35 லூக் 2:11 |
| 7 | அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது: தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்: இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும். | 2சாமு 7:16 சங் 2:8 சங் 72:8-11 சங் 89:35-37 எரே 33:15-21 தானி 2:35 தானி 2:44 தானி 7:14 தானி 7:27 லூக் 1:32 லூக் 1:33 1கொரி 15:24-28 |
| 8 | யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை ஆண்டவர் அனுப்பியுள்ளார்: அது இஸ்ரயேல் மேல் இறங்கித் தன் செயலைச் செய்யும். | ஏசா 7:7 ஏசா 7:8 ஏசா 8:4-8 மீகா 1:1-9 சகரி 1:6 சகரி 5:1-4 மத் 24:35 |
| 9 | எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள் ஆகிய அனைத்து மக்களும் இதை அறிந்து கொள்வார்கள். | ஏசா 26:11 1இரா 22:25 யோபு 21:19 யோபு 21:20 எரே 32:24 எரே 44:28 எரே 44:29 எசே 7:9 எசே 7:27 எசே 30:19 எசே 33:33 |
| 10 | செருக்கினாலும் இதயத்தில் எழும் இறுமாப்பினாலும் அவர்கள் சொல்லுவதாவது: “செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம். காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன: எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்”. | 1இரா 7:9-12 1இரா 10:27 மல்கி 1:4 |
| 11 | ஆதலால் ஆண்டவர் இரட்சீனின் அதிகாரிகளை அவர்களுக்கு எதிராய்க் கிளர்ந்தெழச் செய்தார்: அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார். | ஏசா 8:4-7 ஏசா 10:9-11 ஏசா 17:1-5 2இரா 15:29 2இரா 16:9 |
| 12 | கிழக்கிலிருந்து சிரியரும், மேற்கிலிருந்து பெலிஸ்தியரும் வந்தார்கள்: தங்கள் வாயை விரிவாய்த்திறந்து இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்: இவையெல்லாம் நடந்தும், அவரது சீற்றம் தணியவிலலை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை. | 2இரா 16:6 2நாளா 28:18 எரே 35:11 |
| 13 | தங்களை நொறுக்க வைத்தவரிடம் மக்கள் திரும்பவில்லை: படைகளின் ஆண்டவரைத் தேடவுமில்லை. | ஏசா 1:5 ஏசா 26:11 ஏசா 57:17 2நாளா 28:22 யோபு 36:13 எரே 5:3 எரே 31:18-20 எசே 24:13 ஓசி 5:15 ஓசி 7:10 ஓசி 7:16 |
| 14 | ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில் உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை அனைவரையும், ஒலிவமரக்கிளையையும் நாணலையும் ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்: | ஏசா 3:2 ஏசா 3:3 ஏசா 19:15 2இரா 17:6-20 ஓசி 1:4 ஓசி 1:6 ஓசி 1:9 ஓசி 4:5 ஓசி 5:12-14 ஓசி 8:8 ஓசி 9:11-17 ஓசி 13:3 ஆமோ 2:14-16 ஆமோ 3:12 ஆமோ 5:2 ஆமோ 5:3 ஆமோ 6:11 ஆமோ 7:8 ஆமோ 7:9 ஆமோ 7:17 ஆமோ 9:1-9 மீகா 1:6-8 |
| 15 | முதியவரும், மதிப்புமிக்கவருமே உயர்ந்தோர்: பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரோ தாழ்ந்தோர். | ஏசா 3:5 ஏசா 5:13 1சாமு 9:6 |
| 16 | இந்த மக்களை வழிநடத்தியோர் அவர்களை நெறிபிறழச் செய்தனர்: அவர்களால் வழி நடத்தப்பட்டவரோ அழிந்துபோயினர். | ஏசா 3:12 மத் 15:14 மத் 23:16-36 |
| 17 | ஆதலால், அவர்களுடைய இளைஞரைக் குறித்து என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை: அவர்களிடையே வாழும் திக்கற்றோர், கைம்பெண்கள்மேல் இரக்கம் காட்டவில்லை: அவர்கள் அனைவரும்இறைப்பற்று இல்லாதவர்கள்: தீச்செயல் புரிபவர்கள்: எல்லாரும் மதிகேட்டையே பேசினர்: இவையெல்லாம் நடந்தும் அவர் சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை. | ஏசா 10:2 ஏசா 13:18 ஏசா 27:11 ஏசா 62:5 ஏசா 65:19 சங் 147:10 எரே 18:21 சகரி 9:17 |
| 18 | கொடுமை தீயைப்போல் கொழுந்து விட்டு எரிந்தது: அது முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது: காட்டின் அடர்ந்த பகுதிகளை அது கொளுத்தி விட்டது: அதனால் புகைமண்டலம் சுழன்று மேலே எழுந்தது. | ஏசா 1:31 ஏசா 30:30 ஏசா 30:33 ஏசா 33:12 ஏசா 34:8-10 ஏசா 66:16 ஏசா 66:17 எண் 11:1-3 உபா 32:22 யோபு 31:11 யோபு 31:12 ஆமோ 7:4 நாகூ 1:6 நாகூ 1:10 மல்கி 4:1 மத் 13:49 மத் 13:50 மத் 25:41 மாற் 9:43-50 |
| 19 | படைகளின் ஆண்டவரது சினத்தால் நாடு நெருப்புக்கு இரையானது: மக்கள் நெருப்புக்கு விறகைப் போல் ஆனார்கள்: ஒருவரும் தம் அடுத்திருப்பாரை விட்டு வைக்கவில்லை. | ஏசா 5:30 ஏசா 8:22 ஏசா 24:11 ஏசா 24:12 ஏசா 60:2 எரே 13:16 யோவே 2:2 ஆமோ 5:18 மத் 27:45 அப் 2:20 |
| 20 | அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப் பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை: இடப்புறம் இருப்பனவற்றை எடுத்து விழுங்கியும் மனம் நிறைவடையவில்லை: ஒவ்வொருவரும் தம் குழந்தையின் சதையைக் கூடத் தின்றனர்: | ஏசா 49:26 லேவி 26:26-29 எரே 19:9 புலம் 4:10 |
| 21 | மனாசே குடும்பத்தார் எப்ராயிம் குடும்பத்தாரையும் எப்ராயிம் குடும்பத்தார் மனாசே குடும்பத்தாரையும் கொன்று தின்றனர்: இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து யூதாவின் மேல் பாய்ந்தனர்: இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை: | நியா 7:2 1சாமு 14:20 2இரா 15:30 2நாளா 28:6-8 மத் 24:10 கலா 5:15 |