அரசன் புலம்புவான்: இளவரசன் அவநம்பிக்கையை அணிந்திருப்பான்: நாட்டு மக்களின் கைகளோ நடுங்கிக்கொண்டிருக்கும்: அவர்களின் வழிகளுக்கேற்ப நானும் அவர்களுக்குச் செய்வேன்: அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியே நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்: அப்போது நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வர்.