ஏசாயா 17:1-5 - WCV
1
தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு: “நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்: அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.
2
அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து ஆடுமாடுகள் திரியும் இடமாகும்: அவை அங்கே படுத்துக் கிடக்கும்: அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.
3
எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்: தமஸ்கின் அரசு இல்லாதொழியும்: இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
4
அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்: அவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.
5
அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும் அவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும் சிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும் இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல யாக்கோபின் நிலைமை இருக்கும்.