12
ஆகையால் எப்ராயிமுக்கு நான் விட்டில்போல் இருக்கின்றேன்: யூதாவின் வீட்டாருக்குப் புற்றுநோய்போல் இருக்கின்றேன்.
13
எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்: யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்: எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
14
ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்: நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்: தூக்கிக்கொண்டு போவேன்: விடுவிப்பவன் எவனுமே இரான்.