| 1 | அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி: “நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில் மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில் மகேர் சாலால் கஸ்பாசைக்குறித்து எழுது. | எரே 36:2 எரே 36:28 எரே 36:32 |
| 2 | உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும் எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்” என்றார். | ரூத் 4:2 ரூத் 4:10 ரூத் 4:11 2கொரி 13:1 |
| 3 | நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, “அவனுக்கு 'மகேர்சாலால் கஸ்பாசு' என்று பெயரிடு. | நியா 4:4 2இரா 22:14 |
| 4 | ஏனெனில் இச்சிறுவன் “அப்பா, அம்மா” என்று அழைக்க அறியு முன்னே, தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும் அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார். | ஏசா 7:15 ஏசா 7:16 உபா 1:39 யோனா 4:11 ரோம 9:11 |
| 5 | மீண்டும் ஆண்டவர் என்னோடு உரையாடி, | ஏசா 7:10 |
| 6 | “அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்: இரட்சீனையும், இரமலியாவின் மகனையும் கண்டு அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள். | 1இரா 7:16 2நாளா 13:8-18 |
| 7 | ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்தார்: கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்: எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்: | ஏசா 17:12 ஏசா 17:13 ஏசா 28:17 ஏசா 59:19 ஆதி 6:17 உபா 28:49-52 எரே 46:7 எரே 46:8 தானி 9:26 தானி 11:10 தானி 11:22 ஆமோ 8:8 ஆமோ 9:5 நாகூ 1:8 லூக் 6:48 வெளிப் 12:15 வெளிப் 12:16 வெளிப் 17:15 |
| 8 | எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்: யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்: இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்: | ஏசா 10:28-32 ஏசா 22:1-7 ஏசா 28:14-22 ஏசா 29:1-9 ஏசா 36:1-37 |
| 9 | மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்: ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்: தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே, செவிகொடுங்கள்: போருக்கென இடையைக் கட்டிக் கொள்ளுங்கள்: ஆயினும் கலக்கமுறுவீர்கள். போர்க்கோலம் கொள்ளுங்கள்: ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள். | ஏசா 7:1 ஏசா 7:2 ஏசா 54:15 எரே 46:9-11 எசே 38:9-23 யோவே 3:9-14 மீகா 4:11-13 சகரி 14:1-3 வெளிப் 17:12-14 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
| 10 | ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்: அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்: கூடிப்பேசி முடிவெடுங்கள்: அதுவும் பயனற்றுப் போகும். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார். | ஏசா 7:5-7 2சாமு 15:31 2சாமு 17:4 2சாமு 17:23 யோபு 5:12 சங் 2:1 சங் 2:2 சங் 33:10 சங் 33:11 சங் 46:1 சங் 46:7 சங் 83:3-18 நீதி 21:30 புலம் 3:37 நாகூ 1:9-12 அப் 5:38 அப் 5:39 |
| 11 | தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்: | எரே 20:7 எரே 20:9 எசே 3:14 அப் 4:20 |
| 12 | “இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்: | ஏசா 7:2-6 ஏசா 51:12 ஏசா 51:13 2இரா 16:5-7 |
| 13 | படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்: அவருக்கே அஞ்சுங்கள்: அவர் திருமுன்னேயே நடுங்குங்கள், | ஏசா 26:3 ஏசா 26:4 லேவி 10:3 எண் 20:12 எண் 20:13 எண் 27:14 ரோம 4:20 |
| 14 | அவரே திருத்தூயகமாய் இருப்பார்: இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்: எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார். | ஏசா 26:20 சங் 46:1 சங் 46:2 நீதி 18:10 எசே 11:16 |
| 15 | அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்: இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்: கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர். | மத் 11:6 மத் 15:14 மத் 21:44 லூக் 20:17 லூக் 20:18 யோவா 6:66 1கொரி 1:23 |
| 16 | இந்தச் சான்றுரையைப் பாதுகாப்பாயக் கட்டிவை: என் சீடரிடையே இந்த இறைக்கூற்றை முத்திரையிட்டு வை: | ஏசா 29:11 தானி 12:4 |
| 17 | யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்: அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன். | ஏசா 25:9 ஏசா 26:8 ஏசா 33:2 ஏசா 64:4 ஆதி 49:18 சங் 27:14 சங் 33:20 சங் 37:34 சங் 39:7 சங் 40:1 சங் 130:5 புலம் 3:25 புலம் 3:26 ஓசி 12:6 மீகா 7:7 ஆபகூ 2:3 1தெச 1:10 2தெச 3:5 எபிரெ 10:36-39 |
| 18 | படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடி கொண்டிருக்கிறார்: நானும் அவர் எனக்களித்த குழந்தைகளும் இஸ்ரயேலில் அவருக்கு அடையாளங்களாகவும் அறிகுறிகளாகவும் இருக்கிறோம். | ஏசா 8:3 ஏசா 7:3 ஏசா 7:16 ஏசா 53:10 சங் 22:30 எபிரெ 2:13 எபிரெ 2:14 |
| 19 | “மாயவித்தைக்காரரையும், முணுமுணுத்து மந்திரங்களை ஓதிக் குறி சொல்வோரையும் அணுகிக் குறி கேளுங்கள் என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ? உயிருள்ளோருக்காகச் செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை?” என்பார்கள். | ஏசா 19:3 லேவி 20:6 உபா 18:11 1சாமு 28:8 1நாளா 10:13 2நாளா 33:6 |
| 20 | “இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள்” என்று அவர்கள் சொல்லாததனால் அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி. | ஏசா 8:16 லூக் 10:26 லூக் 16:29-31 யோவா 5:39 யோவா 5:46 யோவா 5:47 அப் 17:11 கலா 3:8-29 கலா 4:21 கலா 4:22 2தீமோ 3:15-17 2பேது 1:19 |
| 21 | பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்: பசியால் வாடி வதங்கும்போது வெறிகொண்டு தங்கள் அரசனையும், தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்: முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள். | ஏசா 8:7 ஏசா 8:8 |
| 22 | தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்: எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்: காரிருள் அவர்களை ஆட்கொள்ளும். | ஏசா 5:30 ஏசா 9:1 2நாளா 15:5 2நாளா 15:6 எரே 13:16 எரே 30:6 எரே 30:7 ஆமோ 5:18-20 செப் 1:14 செப் 1:15 மத் 8:12 மத் 24:29 லூக் 21:25 லூக் 21:26 யூதா 1:13 |