9
ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? அவர் முற்றிலும் அழித்துவிடுவார்: தீமை மீண்டும் தலைதூக்காது.
10
குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள்.
11
ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து தோன்றினான்.
12
ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்: உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் துன்புறுத்தமாட்டேன.