5
அப்பொழுது சிரியாவின் மன்னன் ரேட்சீனும் இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்து, ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களால் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
6
அவ்வேளையில், ஏதோம் மன்னன் தன் நாட்டிற்காக ஏலத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து வருகின்றனர்.
7
எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி “நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்” என்று சொன்னான்.