மீகா 4:11-13 - WCV
11
இப்பொழுது, வேற்றினத்தார் பலர் உனக்கு எதிராய் ஒன்று கூடியிருக்கின்றார்கள்: “சீயோன் தீட்டுப்படட்டும்: அதன் வீழ்ச்சியை நம் கண்கள் காணட்டும்” என்று சொல்லுகின்றார்கள்.
12
ஆனால் அவர்கள் ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை. அவரது திட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல் அவர் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கின்றார்.
13
மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி: நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்: உன்னுடைய குளம்புகளை வெண்கலம் ஆக்குவேன்: மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்கிப் போடுகிறாய்: அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்: அவர்களது செல்வங்களை அனைத்துலகின் ஆண்டவரிடம் ஒப்படைப்பாய்.”