6
ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்: அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்படி செய்வேன்.
7
அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்: அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்: அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்: ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன: விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.
8
இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்: வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்: குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்: நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.