4
ஏனெனில் இச்சிறுவன் “அப்பா, அம்மா” என்று அழைக்க அறியு முன்னே, தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும் அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார்.
5
மீண்டும் ஆண்டவர் என்னோடு உரையாடி,
6
“அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்: இரட்சீனையும், இரமலியாவின் மகனையும் கண்டு அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள்.
7
ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்தார்: கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்: எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்:
8
எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்: யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்: இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்: