1
பின்னர் ஆண்டவரின் செவிகளில் படுமாறு தங்கள் கடினப்பாடுகளைப் பற்றி மக்கள் முறையிட்டனர்: ஆண்டவர் அதைக் கேட்டபோது அவருக்குச் சினம் மூண்டது: ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்தது: பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை அது எரித்துவிட்டது.
2
அப்போது மக்கள் மோசேயிடம் அழுதனர்: மோசே ஆண்டவரிடம் மன்றாடவே நெருப்பு அணைந்தது.
3
எனவே அந்த இடத்துக்குத் தபேரா என்று பெயராயிற்று: ஏனெனில், ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே எரிந்தது.