ஏசாயா 31:4-9 - WCV
4
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை: அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார்.
5
பறக்கும் பறவைகள் போல் படைகளின் ஆண்டவர் எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்: அதைப் பாதுகாத்து விடுவிப்பார்: தண்டிக்காமல் தப்புவிப்பார்.
6
இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்: என்னிடம் திரும்பி வாருங்கள்.
7
அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.
8
“அசீரியன் வாளால் வீழ்வான்: ஆனால் மனிதரின் வாளாலன்று: அவனை வாள் விழுங்கிவிடும்: ஆனால் அது மனிதரின் வாளன்று: அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்: அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.
9
அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்: அவன் தலைவர் கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார், சீயோனில் தீப்பிழம்பையும் எருசலேமில் தீச்சூளையையும் கொண்ட ஆண்டவர்.