| 1 | முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள் என்னைத் தேடி அடைய இடமளித்தேன்: என்னை நாடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்: என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி, “இதோ நான், இதோ நான்” என்றேன். | ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 11:10 ஏசா 55:5 சங் 22:27 ரோம 9:24-26 ரோம 9:30-26 ரோம 10:20 எபே 2:12 எபே 2:13 |
| 2 | தங்கள் எண்ணங்களின்படி நடந்து பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும் கலகக்கார மக்களினத்தின் மீது நாள் முழுவதும் என் கைகளை விரித்து நீட்டினேன். | நீதி 1:24 மத் 23:37 லூக் 13:34 லூக் 19:41 லூக் 19:42 ரோம 10:21 |
| 3 | அந்த மக்களினத்தார் என் கண் எதிரே இவற்றைச் செய்து இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்: தோட்டங்களில் பலியிட்டு, செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர். | ஏசா 3:8 உபா 32:16-19 உபா 32:21-19 2இரா 17:14-17 2இரா 22:17 சங் 78:40 சங் 78:58 எரே 32:30-35 எசே 8:17 எசே 8:18 மத் 23:32-36 |
| 4 | கல்லறைகளிடையே அமர்ந்து மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்றனர்: பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்: தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர். | எண் 19:11 எண் 19:16-20 உபா 18:11 மத் 8:28 மாற் 5:2-5 லூக் 8:27 |
| 5 | இவ்வாறிருந்தும், “எட்டி நில், என் அருகில் வராதே, நான் உன்னைவிடத் தூய்மையானவன்” என்கின்றனர். என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும் நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர். | மத் 9:11 லூக் 5:30 லூக் 7:39 லூக் 15:2 லூக் 15:28-30 லூக் 18:9-12 அப் 22:21 அப் 22:22 ரோம 2:17-29 யூதா 1:19 |
| 6 | அவர்களுக்குரியது என்முன் எழுதப்பட்டாயிற்று: நான் அமைதியாய் இருப்பதில்லை: அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன். | யாத் 17:14 உபா 32:34 சங் 56:8 மல்கி 3:16 வெளிப் 20:12 |
| 7 | அவர்கள் தீச்செயலுக்கும் அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும் சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் ஆண்டவர் மலைமேல் தூபம் காட்டினார்கள்: குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்: அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன். | யாத் 20:5 லேவி 26:39 எண் 32:14 சங் 106:6 சங் 106:7 தானி 9:8 மத் 23:31-36 |
| 8 | ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக்குலையில் புது இரசம் கிடைக்கும்போது, “அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது” என்பார்கள். அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்: அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன். | ஏசா 6:13 எரே 30:11 யோவே 2:14 ஆமோ 9:8 ஆமோ 9:9 மத் 24:22 மாற் 13:20 ரோம 9:27-29 ரோம 11:5 ரோம 11:6 ரோம 11:24-26 |
| 9 | யாக்கோபினின்று வழிமரபினரையும், யூதாவினின்று என் மலைகளை உடைமையாக்குவோரையும் தோன்றச் செய்வேன். நான் தேர்ந்துகொண்டோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்: என் ஊழியர் அங்கே வாழ்வர். | ஏசா 10:20-22 ஏசா 11:11-16 ஏசா 27:6 எரே 31:36-40 எரே 33:17-26 எசே 36:8-15 எசே 36:24-15 எசே 37:21-28 எசே 39:25-29 ஆமோ 9:11-15 ஒபதி 1:17-21 செப் 3:20 சகரி 10:6-12 |
| 10 | என்னை வழிபடும் என் மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆடுகளுக்கு மேய்நிலமாகவும் ஆக்கோர் பள்ளத்தாக்கு மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும். | ஏசா 33:9 ஏசா 35:2 எசே 34:13 எசே 34:14 |
| 11 | ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு, என் திருமலையை மறந்தவர்களே! கத்து தெய்வத்திற்கு விருந்து படைத்து, மெனீ தெய்வத்திற்கு நறுமணத்திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் வார்ப்பவர்களே! | ஏசா 1:28 உபா 29:25 1நாளா 28:9 எரே 17:13 |
| 12 | உங்களை வாளுக்கு இரையெனக் குறிப்பேன்: நீங்கள் அனைவரும் கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்: ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்: நீங்கள் மறுமொழி தரவில்லை: நான் பேசினேன், நீங்கள் கவனிக்கவில்லை: என் பார்வைக்குத் தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்: எனக்கு விருப்பமில்லாததைத் தேர்ந்து கொண்டீர்கள். | ஏசா 3:25 ஏசா 10:4 லேவி 26:25 உபா 32:25 எரே 18:21 எரே 34:17 எசே 14:17-21 செப் 1:4-6 மத் 22:7 |
| 13 | ஆதலால் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியர்கள் உண்பார்கள்: நீங்களோ பசியால் வாடுவீர்கள். என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்: நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்: என் அடியார்கள் அக்களிப்பார்கள்: நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள். | சங் 34:10 சங் 37:19 சங் 37:20 மல்கி 3:18 லூக் 14:23 லூக் 14:24 லூக் 16:24 லூக் 16:25 |
| 14 | என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்: நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்: ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள். | ஏசா 24:14 ஏசா 52:8 ஏசா 52:9 யோபு 29:13 சங் 66:4 எரே 31:7 யாக் 5:13 |
| 15 | நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்: என் தலைவராகிய ஆண்டவர் உங்களைக் கொன்றொழிப்பார்: தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார். | நீதி 10:7 எரே 29:22 சகரி 8:13 |
| 16 | மண்ணுலகில் ஆசி பெற விழைபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசிபெறுவான்: பூவுலகில் ஆணையிடுபவன் மெய்க் கடவுளின் பெயரால் ஆணையிடுவான்: ஏனெனில், முந்நாளைய துன்பங்கள் மறந்து போயின: அவை என் பார்வையிலிருந்து மறைந்து போயின. | சங் 72:17 எரே 4:2 |
| 17 | இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்: முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை: மனத்தில் எழுதுவதுமில்லை. | ஏசா 51:16 ஏசா 66:22 2பேது 3:13 வெளிப் 21:1-5 |
| 18 | நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். | ஏசா 12:4-6 ஏசா 42:10-12 ஏசா 44:23 ஏசா 49:13 ஏசா 51:11 ஏசா 52:7-10 ஏசா 66:10-14 சங் 67:3-5 சங் 96:10-13 சங் 98:1-9 செப் 3:14 சகரி 9:9 1தெச 5:16 வெளிப் 11:15-18 வெளிப் 19:1-6 |
| 19 | நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்: என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்: இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. | ஏசா 62:4 ஏசா 62:5 உன்ன 3:11 எரே 32:41 செப் 3:17 லூக் 15:3 லூக் 15:5 |
| 20 | இனி அங்கே நில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது: தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்: ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். | உபா 4:40 யோபு 5:26 சங் 34:12 |
| 21 | அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்: திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள். | ஏசா 62:8 ஏசா 62:9 லேவி 26:16 உபா 28:30-33 நியா 6:1-6 எரே 31:4 எரே 31:5 ஆமோ 9:14 |
| 22 | வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை: மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை: மரங்களின் வாழ்நாள் போன்றே என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்: நான் தேர்ந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள். | ஏசா 65:9 ஏசா 65:15 ஆதி 5:5 ஆதி 5:27 லேவி 26:16 சங் 92:12-14 வெளிப் 20:3-5 |
| 23 | வீணாக அவர்கள் உழைப்பதில்லை: தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை: ஏனெனில், அவர்கள் ஆண்டவரது ஆசியைப் பெற்றோர்pன் வழிமரபினர்! அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள். | ஏசா 49:4 ஏசா 55:2 ஏசா 61:9 லேவி 26:3-10 லேவி 26:20-10 லேவி 26:22-10 லேவி 26:29-10 உபா 28:3-12 உபா 28:38-42 ஓசி 9:11-14 ஆகா 1:6 ஆகா 2:19 மல்கி 3:10 1கொரி 15:58 |
| 24 | அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்: அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன். | ஏசா 58:9 சங் 32:5 சங் 50:15 சங் 91:15 தானி 9:20-23 தானி 10:12 மாற் 11:24 லூக் 15:18-20 அப் 4:31 அப் 10:30-32 அப் 12:5-16 1யோவா 5:14 1யோவா 5:15 |
| 25 | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்: சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்: பாம்பு புழுதியைத் தின்னும்: என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர். | ஏசா 11:6-9 ஏசா 35:9 அப் 9:1 அப் 9:19-21 1கொரி 6:9-11 தீத் 3:3-7 |