எசேக்கியேல் 36:8-15 - WCV
8
ஆனால் இஸ்ரயேல் மலைகளே! நீங்கள் உங்கள் கிளைகளைப் பரப்பி, என் மக்களுக்காய்க் கனிகளைச் சுமப்பீர்கள். ஏனெனில் அவர்கள் விரைவில் வந்துவிடுவர்.
9
ஏனெனில், நான் உங்களுக்காய் இருக்கிறேன்: உங்களைக் கண்ணோக்குவேன். உங்கள் நாடு மீண்டும் உழப்பட்டு விதை விதைக்கப்படும்.
10
உங்கள் மக்களைப் பெருகச் செய்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் பெருகச் செய்வேன். நகர்களில் மக்கள் குடியேறுவர். அழிவிடங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும்.
11
உங்களில் மானிடரையும் விலங்குகளையும் மிகுதியாக்குவேன். அவர்கள் பலுகிப் பெருகுவர். முற்காலங்களைப்போல் உங்களைக் குடியேற்றுவேன். முந்தைய காலங்களை விட மிகுதியாக நீங்கள் வளமடையச் செய்வேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
12
இஸ்ரயேல் மக்களாகிய என் மக்களை உங்களில் நடமாடச் செய்வேன். அவர்கள் உங்களை உடைமையாக்கிக் கொள்வார்கள். நீங்கள் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள். நீங்கள் இனி ஒருபோதும் அவர்களைப் பிள்ளையில்லாதாராய்ச் செய்யமாட்டீர்கள்.
13
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடம் மக்கள் “நீங்கள் மனிதரை விழுங்கி, உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்கிறீர்கள்” என்று சொல்கிறார்கள்.
14
எனவே, மனிதரை நீங்கள் இனிமேல் விழுங்க மாட்டீர்கள். உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்ய மாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15
இனிமேல், நாடுகளின் பழிச்சொல்லை நீங்கள் கேட்கவிடமாட்டேன்: மக்களினங்களின் இழிசொல்லை நீங்கள் சுமக்கமாட்டீர்கள்: உங்கள் நாட்டை விழ வைக்கமாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.