3
நீங்கள் என் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு, கட்டளைகளை நிறைவேற்றி அவற்றிற்கேற்ப நடந்தால்,
4
ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன்.வயல் தன் பலன்களைத் தரும்: நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும்.
5
கதிர் அறுப்பு திராட்சைப்படி அறுவடைவரை இருக்கும்.பழ அறுவடை பயிர் விதைப்புவரை வரும்: நீங்கள் விரும்புவனவற்றை உண்டு நாட்டில் நலமாய் வாழ்வீர்கள்.
6
நாட்டிற்கு அமைதி அருள்வேன்.அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக்கொள்வீர்கள்.நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன்.வாள் உங்கள் நாட்டில் உலவுவதில்லை.
7
உங்கள் எதிரிகளைத் துரத்தியடிப்பீர்கள்: அவர்கள் உங்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.
8
உங்களில் ஐந்து பேர் நூறுபேரையும், நூறுபேர் பதினாயிரம் பேரையும் துரத்துவீர்கள்: உங்கள் எதிரிகள் உங்கள் முன்வாளால் வெட்டுண்டு அழிவர்.
9
நான் உங்களுக்குக் கருணைக்கண் காட்டி, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களிடமிருந்தும் என் உடன்படிக்கையை நிலைப்படுத்துவேன்.
10
சென்ற ஆண்டின் பழைய தானியத்தை உண்பீர்கள்: புதிய தானியத்தின் வருகையால் பழையது விலக்கப்படும்.