1நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!சங் 18:7-15 சங் 144:5 சங் 144:6 மாற் 1:10 2விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்: வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.ஏசா 37:20 ஏசா 63:12 யாத் 14:4 1சாமு 17:46 1சாமு 17:47 1இரா 8:41-43 சங் 46:10 சங் 67:1 சங் 67:2 சங் 79:10 சங் 83:13 சங் 98:1 சங் 98:2 சங் 102:15 சங் 102:16 சங் 106:8 எசே 38:22 எசே 38:23 எசே 39:27 எசே 39:28 தானி 4:1-3 தானி 4:32-37 தானி 6:25-27 யோவே 3:16 யோவே 3:17 3நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்: மலைகள் உம் முன்னே உருகி ஓடின!யாத் 34:10 உபா 4:34 உபா 10:21 நியா 5:4 நியா 5:5 2சாமு 7:23 சங் 65:6 சங் 66:3 சங் 66:5 சங் 68:8 சங் 76:12 சங் 105:27-36 சங் 106:22 4தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை.சங் 31:19 1கொரி 2:9 1கொரி 2:10 எபே 3:5-10 எபே 3:17-21 கொலோ 1:26 கொலோ 1:27 1தீமோ 3:16 1யோவா 3:1 1யோவா 3:2 1யோவா 4:10 வெளிப் 21:1-4 வெளிப் 21:22-24 வெளிப் 22:1-5 5மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்: இதோ, நீர் சினமடைந்தீர்: நாங்கள் பாவம் செய்தோம்: நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?யாத் 20:24 யாத் 25:22 யாத் 29:42 யாத் 29:43 யாத் 30:6 எபிரெ 4:16 6நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்: எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின: நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்: எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன.ஏசா 6:5 ஏசா 53:6 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 யோபு 40:4 யோபு 42:5 யோபு 42:6 சங் 51:5 ரோம 7:18 ரோம 7:24 எபே 2:1 எபே 2:2 தீத் 3:3 7உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை: உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை: நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்: எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர்.ஏசா 50:2 ஏசா 59:16 சங் 14:4 எசே 22:30 ஓசி 7:7 ஓசி 7:14 8ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.ஏசா 63:16 யாத் 4:22 உபா 32:6 கலா 3:26 கலா 3:29 9ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்: குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்: உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.சங் 6:1 சங் 38:1 சங் 74:1 சங் 74:2 சங் 79:5-9 எரே 10:24 ஆபகூ 3:2 10உம் புனித நகர்கள் பாலை நிலமாயின: சீயோன் பாழ் நிலமாயிற்று: எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.ஏசா 1:7 2இரா 25:9 2நாளா 36:19-21 சங் 79:1-7 புலம் 1:1-4 புலம் 2:4-8 புலம் 5:18 தானி 9:26 தானி 9:27 தானி 12:7 மீகா 3:12 லூக் 21:21 லூக் 21:24 வெளிப் 11:1 வெளிப் 11:2 11எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய தூய்மையும் மாட்சியும் மிக்க எங்கள் திருக்கோவில் நெருப்புக்கு இரையாயிற்று: எங்களுக்கு அருமையானவை அனைத்தும் அழிந்து போயின.2இரா 25:9 2நாளா 36:19 சங் 74:5-7 எரே 52:13 புலம் 2:7 எசே 7:20 எசே 7:21 எசே 24:21 எசே 24:25 மத் 24:2 12ஆண்டவரே, இவற்றைக் கண்டும் நீர் வாளாவிருப்பீரோ? மவுனமாயிருந்து எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?ஏசா 42:14 சங் 10:1 சங் 74:10 சங் 74:11 சங் 74:18 சங் 74:19 சங் 79:5 சங் 80:3 சங் 80:4 சங் 83:1 சங் 89:46-51 சகரி 1:12 வெளிப் 6:10