| 1 | ஏதோமிலிருந்து வருகின்ற இவர் யார்? கருஞ்சிவப்பு உடை உடுத்திப் பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்? அழகுமிகு ஆடை அணிந்து பேராற்றலுடன் பீடுநடைபோடும் இவர் யார்? நானேதான் அவர்! வெற்றியை பறைசாற்றுபவர்: விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர். | சங் 24:7-10 உன்ன 3:6 உன்ன 6:10 உன்ன 8:5 மத் 21:10 |
| 2 | உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்? உம் உடைகள் திராட்சை பிழியும் ஆலையில் மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்? |
| 3 | தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்: மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை: என் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்: என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்: அவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறிந்தது: என் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன். | ஏசா 25:10 புலம் 1:15 மல்கி 4:3 வெளிப் 14:19 வெளிப் 14:20 வெளிப் 19:13-15 |
| 4 | நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள் என் நெஞ்சத்தில் இருந்தது: மீட்பின் ஆண்டு வந்துவிட்டது. | ஏசா 34:8 ஏசா 35:4 ஏசா 61:2 எரே 51:6 சகரி 3:8 லூக் 21:22 வெளிப் 6:9-17 வெளிப் 11:13 வெளிப் 18:20 |
| 5 | சுற்றுமுற்றும் பார்த்தேன்: துணைபுரிவோர் எவருமில்லை: திகைப்புற்று நின்றேன்: தாங்குவார் யாருமில்லை: என் புயமே எனக்கு வெற்றி கொணர்ந்தது: என் சினமே எனக்கு ஊக்கமளித்தது. | ஏசா 63:3 ஏசா 41:28 ஏசா 50:2 ஏசா 59:16 யோவா 16:32 |
| 6 | சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்: சீற்றமடைந்து அவர்களைக் குடிவெறி கொள்ளச்செய்தேன்: அவர்கள் குருதியைத் தரையில் கொட்டினேன். | ஏசா 63:2 ஏசா 63:3 ஏசா 49:26 ஏசா 51:21-23 யோபு 21:20 சங் 60:3 சங் 75:8 எரே 25:16 எரே 25:17 எரே 25:26 எரே 25:27 புலம் 3:15 வெளிப் 14:10 வெளிப் 16:6 வெளிப் 16:19 வெளிப் 18:3-6 |
| 7 | ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்: ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்: தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார். | ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 51:2 நெகே 9:7-15 நெகே 9:19-21 நெகே 9:27-21 நெகே 9:31-21 சங் 63:3 சங் 78:11-72 சங் 105:5-45 சங் 107:8 சங் 107:15 சங் 107:21 சங் 107:31 சங் 136:1-26 சங் 147:19 சங் 147:20 எசே 16:6-14 ஓசி 2:19 |
| 8 | ஏனெனில், “மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று அவர் கூறியுள்ளார்: மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார். | ஏசா 41:8 ஆதி 17:7 யாத் 3:7 யாத் 4:22 யாத் 4:23 யாத் 6:7 யாத் 19:5 யாத் 19:6 ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:28 |
| 9 | துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்: தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்: தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்: பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார். | யாத் 3:7-9 நியா 10:16 சகரி 2:8 மத் 25:40 மத் 25:45 அப் 9:4 எபிரெ 2:18 எபிரெ 4:15 |
| 10 | அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி, அவரது தூய ஆவியைத் துயருறச் செய்தனர்: ஆதலால் அவரும் அவர்களின் பகைவராய் மாறினார்: அவர்களை எதிர்த்து அவரே போரிட்டார். | ஏசா 1:2 ஏசா 65:2 யாத் 15:24 யாத் 16:8 யாத் 32:8 எண் 14:9-11 எண் 16:1-35 உபா 9:7 உபா 9:22-24 நெகே 9:16 நெகே 9:17 நெகே 9:26 நெகே 9:29 புலம் 1:18 புலம் 1:20 எசே 2:3 எசே 2:7 எசே 20:8 எசே 20:13 எசே 20:21 |
| 11 | அப்பொழுது அவர் மக்கள் மோசேயின் காலமாகிய பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்: தம் மந்தையை மேய்ப்பரோடு கடலினின்று கரையேற்றியவர் எங்கே? அவருக்குத் தம் தூய ஆவியை அருளியவர் எங்கே? | லேவி 26:40-45 உபா 4:30 உபா 4:31 சங் 25:6 சங் 77:5-11 சங் 89:47-50 சங் 143:5 லூக் 1:54 லூக் 1:55 |
| 12 | தம் மாட்சிமிகு புயத்தால் மோசேயின் வலக்கையை நடத்தி சென்றவர் எங்கே? தம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு அவர்கள் முன் தண்ணீரைப் பிரித்தவர் எங்கே? | யாத் 15:6 யாத் 15:13 யாத் 15:16 சங் 80:1 |
| 13 | ஆழ்கடலின் நடுவே அவர்களை நடத்திச் சென்றவர் யார்? பாலை நிலத்தில் தளராத குதிரைபோல் அவர்கள் தடுமாறவில்லை. | சங் 106:9 ஆபகூ 3:15 |
| 14 | கால்நடை பள்ளத்தாக்கினுள் இறங்கிச் செல்வதுபோல் அவர்களும் இளைப்பாற ஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது. இவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு நீர் உம் மக்களை நடத்திவந்தீர். | யோசு 22:4 யோசு 23:1 எபிரெ 4:8-11 |
| 15 | விண்ணகத்தினின்று கண்ணோக்கும்: தூய்மையும் மாட்சியும் உடைய உம் உறைவிடத்தினின்று பார்த்தருளும்: உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே? என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும் அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே? என்னிடமிருந்து அவற்றை நிறுத்தி வைத்துள்ளீரே! | உபா 26:15 சங் 33:14 சங் 80:14 சங் 102:19 சங் 102:20 புலம் 3:50 |
| 16 | ஏனெனில் நீரே எங்கள் தந்தை: ஆபிரகாம் எங்களை அறியார்: இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்: ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை: பண்டை நாளிலிருந்து “எம் மீட்பர்” என்பதே உம் பெயராம். | ஏசா 64:8 யாத் 4:22 உபா 32:6 1நாளா 29:10 எரே 3:19 எரே 31:9 மல்கி 1:6 மல்கி 2:10 மத் 6:9 |
| 17 | ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும். | சங் 119:10 சங் 119:36 சங் 141:4 எசே 14:7-9 2தெச 2:11 2தெச 2:12 |
| 18 | உம் திருத்தலத்தை உம் புனித மக்கள் சிறிது காலம் உடைமையாகக் கொண்டிருந்தனர்: எங்கள் பகைவர் அதைத் தரைமட்டமாக்கினர். | ஏசா 62:12 யாத் 19:4-6 உபா 7:6 உபா 26:19 தானி 8:24 1பேது 2:9 |
| 19 | உம்மால் என்றுமே ஆளப்படாதவர்கள் போலானோம்: உம் பெயரால் அழைக்கப்படாதவர்கள் போலானோம். | சங் 79:6 சங் 135:4 எரே 10:25 அப் 14:16 ரோம 9:4 எபே 2:12 |