எண்ணாகமம் 14:9-11 - WCV
9
எனவே ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்: நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்: அவர்கள் நமக்கு இரையாவர்: அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று: ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்: அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.
10
ஆனால் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்: உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
11
ஆண்டவர் மோசேயிடம், “எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்?