5
கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்: முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.
6
இரவில் என் பாடலைப்பற்றி நினைத்துப் பார்த்தேன்: என் இதயத்தில் சிந்தித்தேன்: என் மனம் ஆய்வு செய்தது:
7
'என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ? இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ?
8
அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ? வாக்குறுதி தலைமுறைதோறும் அற்றுப்போய்விடுமோ?
9
கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ? அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?' (சேலா)
10
அப்பொழுது நான், 'உன்னதரின் வலக்கை மாறுபட்டுச் செயலாற்றுவதுபோல் என்னை வருத்துகின்றது' என்றேன்.
11
ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்: முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.