19
நீர் உமது பேரிரக்கத்தினால் அவர்களைப் பாலை நிலத்திலே கைவிட்டு விடவில்லை, அவர்களைப் பகலில் வழிநடத்தி வந்த மேகத் தூணையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை அரவில் காட்டி வந்த நெருப்புத்தூணையும் அவர்களை விட்டு விலக்கவுமில்லை.
20
அவர்களுக்கு அறிவு புகட்ட உமது நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்கு உண்ணக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களின் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தீர்.
21
நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை.