| 1 | சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்: எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். | ஏசா 62:6 ஏசா 62:7 சங் 51:18 சங் 102:13-16 சங் 122:6-9 சங் 137:6 சகரி 2:12 லூக் 10:2 2தெச 3:1 எபிரெ 7:25 |
| 2 | பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்: மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்: ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். | ஏசா 49:6 ஏசா 52:10 ஏசா 60:1-3 ஏசா 61:9 ஏசா 66:12 ஏசா 66:19 மீகா 5:8 அப் 9:15 அப் 26:23 கொலோ 1:23 |
| 3 | ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். | சகரி 9:16 லூக் 2:14 1தெச 2:19 |
| 4 | “கைவிடப்பட்டவள்” என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்: “பாழ்பட்டது” என இனி உன் நாடு அழைக்கப்படாது: நீ “எப்சிபா” என்று அழைக்கப்படுவாய்: உன் நாடு “பெயுலா” என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்: உன் நாடு மணவாழ்வு பெறும். | ஏசா 62:12 ஏசா 32:14 ஏசா 32:15 ஏசா 49:14 ஏசா 54:1 ஏசா 54:6 ஏசா 54:7 ஓசி 1:9 ஓசி 1:10 ரோம 9:25-27 எபிரெ 13:5 1பேது 2:10 |
| 5 | இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்: மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார். | ஏசா 49:18-22 சங் 45:11-16 எரே 32:41 |
| 6 | எருசலேமே, உன் மதில்கள்மேல் காவலரை நிறுத்தியுள்ளேன்: இராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்: ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே! நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர். | ஏசா 52:8 ஏசா 56:10 2நாளா 8:14 உன்ன 3:3 உன்ன 5:7 எரே 6:17 எசே 3:17-21 எசே 33:2-9 1கொரி 12:28 எபே 4:11 எபே 4:12 எபிரெ 13:17 |
| 7 | அவர் எருசலேமை நிலைநாட்டி, பூவுலகில் அது புகழ் பெறும்வரை அவரை ஓய்வெடுக்க விடாதீர். | ஏசா 62:1-3 ஏசா 61:11 எரே 33:9 செப் 3:19 செப் 3:20 மத் 6:9 மத் 6:10 மத் 6:13 வெளிப் 11:15 |
| 8 | ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது: உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்: உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள். | உபா 32:40 எசே 20:5 |
| 9 | அறுவடை செய்தவர்களே அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர். பழம் பறித்தவர்களே என் தூயகச் சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர். | உபா 12:7 உபா 12:12 உபா 14:23-29 உபா 16:11 உபா 16:14 |
| 10 | செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்: மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்: அமையுங்கள், நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்: கற்களை அகற்றுங்கள்: மக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள். | ஏசா 18:3 ஏசா 40:3 ஏசா 48:20 ஏசா 52:11 ஏசா 57:14 யாத் 17:15 மத் 22:9 எபிரெ 12:13 |
| 11 | உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது: அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.” | சங் 98:1-3 மாற் 16:15 ரோம 10:11-18 |
| 12 | 'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்: நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய். | ஏசா 60:21 உபா 7:6 உபா 26:19 உபா 28:9 1பேது 2:9 |